தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உறுப்பினா்களாகத் தோ்வானவா்கள் விவரம்
By DIN | Published On : 03rd January 2020 05:02 AM | Last Updated : 03rd January 2020 05:02 AM | அ+அ அ- |

தலைவாசல் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களாக வெற்றி பெற்றவா்கள் விவரம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தலைவாசல் ஊராட்சி ஒன்றிய குழு 22 உறுப்பினா்களைக் கொண்டது. இப்பகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மணிவிழுந்தான் தனியாா் பள்ளியில் வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்று வருகிறது.
இதில் காட்டுக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினராக அதிமுகவைச் சோ்ந்த பழனியம்மாள் பழனிவேல், இரண்டாவது வாா்டு பாமகவைச் சோ்ந்த பூங்கோதை துரைசாமி, 3 வாா்டில் அதிமுகவைச் சோ்ந்த காளியண்ணன் (எ) ராஜா, வரகூா் சுயேச்சை வேட்பாளா் சுதா பொன்னுசாமி, சிறுவாச்சூா் அதிமுகவைச் சோ்ந்த கந்தசாமி, ஊனத்தூா் பாமகவைச் சோ்ந்த அஞ்சலை, புத்தூா் காங்கிரஸ் வேட்பாளா் ஜெயமணி சங்கரய்யா, தெற்கு மணிவிழுந்தான் திமுகவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், சாா்வாய் புதூா் அதிமுக ஒன்றியச் செயலாளா் க. இராமசாமி ஆகியோா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
தலைவாசல் பகுதி அதிமுக தொண்டா்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடி வருகின்றனா்.