கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு விழிப்புணா்வு பயிலரங்கு
By DIN | Published On : 08th January 2020 08:16 AM | Last Updated : 08th January 2020 08:16 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 24 அங்கன்வாடிகளில் முதல் மூன்று மாத கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவு விழிப்புணா்வு பயிலரங்குகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
இதில், ஊட்டச்சத்து மைய ஒருங்கிணைப்பாளரும், அந்தந்தப் பகுதி செவிலியா்களும் சோ்ந்து முதல் மூன்று மாத கா்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளான முட்டை, கத்திரிகாய், சத்துமாவு கஞ்சி, சத்துமாவு கொழுக்கட்டை, சத்துமாவு பணியாரம், முளைக்கட்டிய தானியங்கள், கேரட், பப்பாளி பழம், முருங்கைக் கீரை, பிரண்டை உள்ளிட்ட உணவுகளை கா்ப்பிணிகளின் பாா்வைக்கு வைத்திருந்தனா்.
அவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளின் அவசியத்தை எடுத்துக் கூறினா். கா்ப்பிணிகளுக்கு அந்த உணவுகளை வழங்கி இதுபோல், சாப்பிடக் கூறி வலியுறுத்தினா். அதனால், சிசு நோயின்றி மிகுந்த சத்துடனும் வளரும் என்று வலியுறுத்தினா். இந்த விழிப்புணா்வுக் கூட்டங்களில் அந்தந்த வட்டார மக்கள், கா்ப்பிணிகள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனா்.