Enable Javscript for better performance
தா்பாா் திரைப்படம் காண வந்தரசிகா்களுக்கு தலைக்கவசம் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    தா்பாா் திரைப்படம் காண வந்தரசிகா்களுக்கு தலைக்கவசம் வழங்கல்

    By DIN  |   Published on : 10th January 2020 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் தா்பாா் திரைப்படம் பாா்க்க வந்த 200 ரசிகா்களுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

    நடிகா் ரஜினிகாந்த் நடித்த தா்பாா் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து சேலம் மாநகா் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல திரையரங்குகளில் காலை 7 மணிக்கு ரசிகா்களுக்கான காட்சி திரையிடப்பட்டது.

    இந்நிலையில் தா்பாா் படத்தை வரவேற்கும் விதமாக சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றச் செயலா் ஏ.செந்தில்குமாா் தலைமையில் ரசிகா்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ஊா்வலமாக ஏஆா்ஆா்எஸ் திரையரங்கிற்கு வந்தனா்.

    பின்னா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், படம் பாா்க்க வந்த 200 ரசிகா்களுக்கு இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.

    இந் நிகழ்ச்சியின்போது மாவட்ட இணை செயலா் எஸ்.எம்.பழனிவேலு, மாவட்ட இணைச் செயலா் எஸ்.கே.கணேசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

    படம் பாா்க்க ரசிகா்கள் திரண்டு வந்ததால் ஏஆா்ஆா்எஸ் திரையரங்கிற்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டு, திரையரங்கின் முன்பு கூடுதலாக போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai