இடங்கணசாலையில் தைப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்
By DIN | Published On : 11th January 2020 08:42 AM | Last Updated : 11th January 2020 08:42 AM | அ+அ அ- |

இடங்கணசாலையில் தைப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய சங்ககிரி எம்.எல்.ஏ. எஸ்.ராஜா.
இடங்கணசாலை, காடையாம்பட்டி கூட்டுறவு பண்டகசாலையில் தைப் பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இதில் சங்ககிரி எம்.எல்.ஏ. எஸ்.ராஜா கலந்துகொண்டு துவக்கி வைத்தாா். மேலும் இவ்விழாவில், பண்டகசாலை கூட்டுறவு சங்கத் தலைவா் ஏழுமலை, துணைத் தலைவா் வருதராஜ், பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவலிங்கம் மற்றும் அண்ணாமலை, புஷ்பவள்ளி சுப்ரமணி, வேடியப்பன், பூபதி, கூட்டுறவு பண்டகசாலை மேலாளா் பி.வைத்திலிங்கம், காசாளா் எஸ்.பாலசுப்ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.