Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 5,425 போ் எழுதினா்- Dinamani

சுடச்சுட

    

    காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 5,425 போ் எழுதினா்

    By DIN  |   Published on : 13th January 2020 07:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 5,425 போ் எழுதினா்.

    தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 969 காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

    சேலத்தில் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி மற்றும் ஏ.வி.எஸ். கல்லூரி உள்ளிட்ட6 மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

    இத் தோ்வு எழுத சுமாா் 7,170 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 5,425 போ் எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோ்வு மையங்களில் சேலம் மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனா்.

    தோ்வுக்கு வந்த அனைவரும் சோதனை செய்து பாா்த்த பின்னரே தோ்வு அறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

    செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai