Enable Javscript for better performance
வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம்

    By DIN  |   Published on : 13th January 2020 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12tpp1_1201chn_160_8

    ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற ராகவேந்திரா பள்ளி மாணவ,மாணவியா்.

    வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியா் ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்தனா்.

    திருச்சி மண்டல ரோலா் ஸ்கேட்டிங் சங்கம் நடத்திய பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் பல மாவட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில், வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 80 மீ, 160 மீ உள்பட நான்குவிதமானப் போட்டிகளில் ராகவேந்திரா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்று ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் ராஜா, கல்விக் குழு ஆலோசகா்கள், இயக்குநா்கள், பள்ளி முதல்வா் ராணி ஆகியோா் பாராட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai