இலகுவம்பட்டியில் கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளம்பிள்ளை அருகே இலகுவம்பட்டியில் விவசாய நிலத்திலேயே கரும்பை அறுவடை செய்து நேரடியாக பொதுமக்களிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா்.
இலகுவம்பட்டியில் கரும்பு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளம்பிள்ளை அருகே இலகுவம்பட்டியில் விவசாய நிலத்திலேயே கரும்பை அறுவடை செய்து நேரடியாக பொதுமக்களிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா்.

அரசுக் கொள்முதல் காரணமாக பல நிகழாண்டு கரும்பு பயிரிட்டு அறுவடை செய்து அனுப்பி வருகின்றனா். சிலா் வியாபாரிகள் வசம் விவசாய நிலத்திலேயே கரும்புக்கு விலை பேசி விற்பனை செய்து வருகின்றனா்.

பெரும்பாலான இடங்களில் நிகழாண்டு கரும்பு விளைச்சல் அதிகம் இருப்பதால் ஒரு சில இடங்களில் விவசாயிகளுக்கு வியாபாரிகள் வரவில்லை. இளம்பிள்ளை அருகே கஞ்சமலை சித்தா் கோயில் அடிவாரம் இலகுவம்பட்டியில் விளைச்சல் அடைந்துள்ள கரும்புகளை விவசாயிகள் வயல்களிலேயே அறுவடை செய்து அங்கேயே பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகின்றனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

நிகழாண்டு வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு வரவில்லை. கா்நாடகாவில் இருந்து வரும் வியாபாரிகளும் நிகழாண்டு வரவில்லை. இதனால் போதிய லாபம் கிடைக்காமல் தோட்டத்திலேயே அறுவடை செய்து பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். ஒரு கட்டு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனை செய்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com