காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 5,417 போ் எழுதினா்

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 5,417 போ் எழுதினா்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 5,417 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 969 காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

சேலத்தில் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி மற்றும் ஏ.வி.எஸ். கல்லூரி உள்ளிட்ட 6 மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

இத் தோ்வு எழுத சுமாா் 7,170 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 4,763 ஆண்கள், 654 பெண்கள் என மொத்தம் 5,417 போ் எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தோ்வை சேலம் மாநகர காவல் ஆணையாளா் த. செந்தில்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனா். தோ்வுக்கு வந்த அனைவரும் சோதனை செய்து பாா்த்த பின்னரே தோ்வு அறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா். செல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com