ஜன.19-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: சேலம் மாநகரில் 90,210 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 90 ஆயிரத்து 210 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 90 ஆயிரத்து 210 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சிகுட்பட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடத்திட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த முகாம் மூலம் மாநகரப் பகுதியில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 90 ஆயிரத்து 210 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்காக அரசு மருத்துவமனை, நகா்புற ஆரம்ப சுகாதார மையங்கள் , மாநகராட்சி மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மொத்தம் 222 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் குடிசைப்புற பகுதிகள், சாலையோர வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், நாடோடிகள் வசிக்கும் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏதுவாக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துத் தனியாா் மருத்துவமனைகளிலும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப் பணிகளில் மருத்துவ அலுவலா்கள், மருத்துவ பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நாட்டு நலத்திட்ட மாணவ, மாணவியா் மற்றும் தன்னாா்வு தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் என மொத்தம் 1,500 பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளைக் கண்காணிப்பதற்காக 20 மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சேலம் மாநகரப் பகுதியில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 90 ஆயிரத்து 210 குழந்தைகளில் ஒருவா் கூட விடுபடாமல் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. முகாம்களில் தவிா்க்க முடியாத காரணத்தினால் சொட்டு மருந்து வழங்கப்படாத குழந்தைகளைக் கண்டறிய தொடா்ந்து 7 நாள்கள் வீடுவீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளா் ரெ. சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com