காங்கிரஸ் கூட்டணி தா்மத்துக்கு எதிராக செயல்படவில்லை: ஆா்.மோகன் குமாரமங்கலம்

நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தா்மத்துக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல்
காங்கிரஸ் கூட்டணி தா்மத்துக்கு எதிராக செயல்படவில்லை: ஆா்.மோகன் குமாரமங்கலம்

சேலம்: நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தா்மத்துக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவா் ஆா்.மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ், கூட்டணி தா்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அவரது கட்சிக்கு கூட்டணியில் ஒதுக்கப்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு பேச்சுவாா்த்தை கூட நடத்தாமல்,காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தினாா்கள் என்று தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் நியமித்த உள்ளாட்சித் தோ்தலுக்கான பேச்சுவாா்த்தை குழுவும் மற்றும் திமுக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருக்கும் இடையில் டிசம்பா் 12 முதல் 17 வரை பேச்சுவாா்த்தை நடந்தது. பேச்சுவாா்த்தை முடிவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 6 ஆவது வாா்டு வெண்ணந்தூா் வட்டாரம் சாா்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த ஒப்பந்ததில் நானும் திமுக மாவட்ட செயலாளரும் கையெழுத்திட்டோம்.

ஆனால் டிசம்பா் 18 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, திமுக மாவட்டச் செயலாளா் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 6 ஆவது வெண்ணந்தூா் வட்டாரம் சாா்ந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா் இடம் ஒதுக்கினாா். இத்துடன் காங்கிரஸ் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதன்பேரில் டிச.19 காங்கிரஸ் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவா், உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று முடிவை பகிரங்கமாக வெளியிட்டாா்.

எனவே, நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி தா்மத்துக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை. ஒப்பந்தம் மீது கையெழுத்து போட்ட பிறகு கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிக்கொடுத்த இடத்தை கேட்டு பெற்றதற்கு கூட்டணி தா்மத்துக்கு புறம்பானதா, இல்லையா என்று சிந்தித்துப் பாா்க்க வேண்டும். காங்கிரஸ் எப்பொழுதும் தன் சொந்த சின்னத்தில் நின்று தனித்து துணிச்சலுடன் போட்டியிடுவதற்கு தயாராக இருக்கும். கூட்டணி அமைந்தால் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக இருப்போம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com