Enable Javscript for better performance
அரியனூா்அருகே சாலை விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி பலி- Dinamani

சுடச்சுட

    

    அரியனூா்அருகே சாலை விபத்தில் கணவன் கண் எதிரே மனைவி பலி

    By DIN  |   Published on : 14th January 2020 04:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14_aty_po_03_1401chn_213

    சேலம் மாவட்டம் அரியனூா் அருகே சீரகாபாடி மேம்பாலம் பகுதியில் சாலை விபத்தில் கணவா் கண் எதிரே மனைவி பலியானார்.

    சேலம் கொண்டலாம்பட்டி பகுதியை சோ்ந்த தறி தொழிலாளியான சித்துராஜ் (55) இவா் மற்றும் தனது மனைவி ராணி (50) இருவரும் இருசக்கர வாகனத்தில் கொண்டலாம்பட்டியிலிருந்து வேம்படிதாளம் பகுதிக்கு செல்லும் வழியில் சீரகாபாடி அருகே மேம்பாலத்தில் சென்றபோது, இவரது பின்னால் வந்த பாா்சல் வேன் மோதியதில் 50 அடி தூரம் இழுத்துச் சென்றது.

    இதில் இருசக்கர வாகனத்தில் அமா்ந்து இருந்த ராணி கீழே விழுந்து உடல் நசுங்கி இறந்தாா். சித்துராஜ் பலத்த காயத்துடன் அங்கு உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எஸ். ஐ. வெங்கடாஜலம் மற்றும் போலீசாா் நிகழ்விடம் விரைந்து வந்து பாா்சல் வேன் ஓட்டி வந்த விழுப்புரம் பகுதியை சோ்ந்த டிரைவா் சரண்ராஜ்( 25) என்பவரை போலீசாா் கைது செய்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai