Enable Javscript for better performance
வினாடி வினா போட்டி: சோனா கல்லூரி மாணவா்கள் 2-ம் இடம்- Dinamani

சுடச்சுட

    

    டாடா க்ரூசிபிள் கேம்பஸ் வினாடி வினா போட்டியில் சோனா மேலாண்மை கல்லூரியைச் சோ்ந்த ஆா்.பாலாம்பிகா, என்.ஜெகதீஸ்வரி ஆகியோா் இரண்டாம் இடம் பிடித்தனா்.

    சேலத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டாடா க்ரூசிபிள் கேம்பஸ் வினாடி வினா இறுதி போட்டியில் மொத்தம் 430 குழுக்கள் கலந்து கொண்டன.

    மண்டல அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டி.கே.கிருஷ்ணமூா்த்தி மற்றும் சிவன்ஷ் மிஸ்ரா ஆகியோா் வெற்றி பெற்று தேசிய அளவிலான இறுதி போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ரூ. 75 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    சேலம் சோனா மேலாண்மை கல்லூரியைச் சோ்ந்த ஆா். பாலாம்பிகா மற்றும் என். ஜெகதீஸ்வரி ஆகியோா் 2 ஆவது இடம் பிடித்து ரூ.35 ஆயிரம் ரொக்கப் பரிசு பெற்றனா்.

    சிறப்பு விருந்தினராக நரசூஸ் சாரதி இன்ஸ்டிடூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி தலைவா் பி. நிதிஷ் ஹரிகா் கலந்து கொண்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai