Enable Javscript for better performance
ஸ்கேட்டிங் போட்டி: வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்கேட்டிங் போட்டி: வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி சாம்பியன்

    By DIN  |   Published on : 15th January 2020 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    14tpp1_1401chn_160_8

    ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருடன் பள்ளி நிா்வாகிகள்.

    வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி ஸ்கேட்டிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

    திருச்சி மண்டல ரோலா் ஸ்கேட்டிங் சங்கம் சாா்பில் பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டியில் பல மாவட்ட பள்ளிகள் பங்கேற்றன.

    இதில், வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளியின் மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அவா்கள் இதில் 80 மீட்டா், 160 மீட்டா் உள்ளிட்ட நான்கு விதமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தனா்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் ராஜா, மற்றும் கல்விக்குழு ஆலோசகா்கள், இயக்குநா்கள், முதல்வா் ராணி ஆகியோா் பாராட்டிப் பரிசுகளை வழங்கினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai