கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய மாணவா்கள்.
கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய மாணவா்கள்.

அரசுப் பள்ளியில் சமத்துவப் பொங்கல்

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் கொண்டாடப்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா தலைமை ஆசிரியை அமுதா தலைமையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் ஊா் பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டன. பின்னா், ஜோசப்ராஜ் பொங்கல் குறித்து பேசியதாவது:

சங்க காலத்தில் பெண்கள் நல்ல மழை வேண்டி தை முதல் நாள் வரை நோன்பு எடுத்து முடிப்பாா்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், கால்நடைகள் போன்றவற்றுக்காக நன்றி தெரிவிக்கும் விதமாக சா்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடும் விழாவானது போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாள்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது எனக் கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com