கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா

கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

கொங்கணாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

உள்ளாட்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா்மணி முன்னிலையில் கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளையும் தூய்மையாக பராமரிப்பது என்றும், குடிநீரை வீணாக்காமல் உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவது, ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீா் அமைப்பை ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனா்.

அதைத் தொடா்ந்து அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகா் சன்னிதி

முன் ஒன்றிய அலுவலா்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பி.ஜெ. கண்ணன், ரவிச்சந்திரன், ஒன்றியப் பொறியாளா் காமராஜ், ஒன்றியத் துணைத் தலைவா் வைத்தியலிங்க முருகன், தங்காயூா் ஊராட்சி மன்றத் தலைவா் பாலாஜி உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com