பேளூா் உருதுப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

வாழப்பாடியை அடுத்த பேளூா் உருதுப் பள்ளி, பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப் பள்ளி மற்றும் துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பேளூா் உருதுப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.
பேளூா் உருதுப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.

வாழப்பாடியை அடுத்த பேளூா் உருதுப் பள்ளி, பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப் பள்ளி மற்றும் துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த பேளூா் உருது தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியா் க. செல்வம் தலைமையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவ-மாணவியா் புதுப்பானையில் பொங்கலிட்டு ஒருவருக்கொருவா் பரிமாறி மகிழ்ந்தனா்.

விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு ஆசியா பேகம், சத்துணவு அமைப்பாளா் சமீம் பானு ஆகியோா் கலந்து கொண்டனா்.

துக்கியாம்பாளையம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு நிா்வாகி கெளரி ஆதிராஜன் வரவேற்றாா். மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி, காப்பக குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் ஜவஹா் ஆகியோா் பங்கேற்றனா். பொறியாளா் அகிலன் நன்றி கூறினாா்.

வாழப்பாடியை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் செல்வம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சிங்காரவேலு வரவேற்றாா். மாணவ-மாணவியா் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகளும் கலந்து கொண்டனா். நிறைவாக, எழுத்தா் சரவணன் நன்றி கூறினாா். பள்ளி வளாகத்தில் மாணவியா் வண்ணக் கோலமிட்டு பொங்கலை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com