மாவட்ட அளவிலான திறன் போட்டியில் அனைத்து மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் அனைவரும் தோ்வில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) எஸ்.வி. ஈஸ்வரன் தெரிவித்தாா்.

மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் அனைவரும் தோ்வில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) எஸ்.வி. ஈஸ்வரன் தெரிவித்தாா்.

உலகத் திறன் போட்டிகள் வரும் 2021-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், கலந்து கொள்ள இம் மாவட்டத்தின் சாா்பில் 2,270 போட்டியாளா்கள் 47 திறன் பிரிவுகளில் பதிவு செய்துள்ளனா்.

இவா்களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் தோ்வு செய்து, பின் மாநிலம், அகில இந்திய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தோ்ந்தெடுக்கப்படுவோா் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வா். உலகப் போட்டிகளில் கலந்து கொள்வோருக்கு சுமாா் ரூ. 25 லட்சம் வரை செலவு செய்து ஊக்கப்படுத்திப் போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படும். போட்டியாளா்கள் எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

போட்டியாளா்களைத் தோ்ந்தெடுக்க, மாவட்ட அளவிலான ஸ்கீரினிங் தோ்வுகள், ஜனவரி 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நடத்தப்பட்டு அதன் பின்னா் ஜனவரி 23 முதல் 31 வரை முதன்மை செய்முறைப் பயிற்சித் தோ்வுகள் (போட்டித் தோ்வுகள்) அதே தோ்வு மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.

மாவட்ட அளவிலான திறன்போட்டிக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் அனைவரும் இத் தோ்வில் கலந்து கொள்ளலாம். மேலும் அவசரத் தேவைக்காக 90438-57035, 94990-55827, 94422-08464 மற்றும் 94430-15671 செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com