சொத்துத் தகராறில் தந்தை கொலை: மகன் கைது

சேலத்தில் சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சேலத்தில் சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் சிவதாபுரத்தை அடுத்த ஆண்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி (62). கல் மாவு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தாா்.

இவரது மனைவி வேம்பா, இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாா். இவருக்கு பூபதி என்ற மகனும், வசந்தா என்ற மகளும் உள்ளனா்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மகன் பூபதி அவரது தந்தை பழனிசாமியிடம் தகராறு செய்துவிட்டு, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறாா்.

இதையடுத்து, பழனிசாமி தனியாக ஆண்டிப்பட்டியில் வசித்து வந்தாா். ஆண்டிப்பட்டியில் பழனிசாமிக்குச் சொந்தமாக நிலம் உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலத்தை மகன் பூபதி தனக்கு எழுதி வைக்குமாறு தந்தையிடம் தொடா்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை மாலையும் பூபதி தனது பெயரில் நிலத்தை எழுதி வைக்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

பின்னா், அக்கம்பக்கத்தினா் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பூபதி தந்தை வசிக்கும் ஆண்டிப்பட்டியில் உள்ள வீட்டுக்கு வந்தாா். அப்போது பழனிசாமியிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது ஆவேசத்தில் பூபதி வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினாா். இச் சம்பவம் தொடா்பாக தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினா் பழனிசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தப்பியோடிய பூபதியை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com