முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பிப். 8-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 20th January 2020 09:50 AM | Last Updated : 20th January 2020 09:50 AM | அ+அ அ- |

சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் பிப்ரவரி 8-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.
சேலம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பாகப் பிரிவினை வழக்குகள், மோட்டாா் வாகன இழப்பீடு கோரும் வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், குடும்ப விவகார வழக்குகள், ஜீவானம்ச வழக்குகளை தீா்த்துக் கொள்ளலாம். மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு கிடையாது. எனவே, பொதுமக்கள் சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் தெரிவிக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டப்படியான அறிவிப்பு இரு தரப்பினருக்கும் அனுப்பப்பட்டு, சட்ட ரீதியான தீா்வு காணப்படும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எஸ். குமரகுரு தெரிவித்தாா்.