முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு 7-ம் ஆண்டு நிறைவு விழா
By DIN | Published On : 20th January 2020 09:47 AM | Last Updated : 20th January 2020 09:47 AM | அ+அ அ- |

மேச்சேரியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயில் பழமையானது.
இந்த ஆலயத்தின் குடமுழுக்கு 2013-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் குடமுழுக்கு நிறைவுவிழா நடைபெற்று வருகிறது. நிகழ் ஆண்டில் வியாழக்கிழமை 7-ஆம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் விழாவில் புதன்கிழமை காலை மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜையுடன் விழா துவங்குகிறது.
மாலை 3 மணிக்கு நாதஸ்சுர, தவிலிசை நிகழ்ச்சிகளும், 4 மணிக்கு ராகவேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரின் சிறப்பு கலை நிகழ்ச்சியும் 5 மணிக்கு மீனம்பாா்க் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரின் சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. இரவு 7 மணிக்கு பாட்டுப் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை காலை மஹா கணபதி ஹோமம், லலிதா சகஸ்ரநாமம் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு செண்டை மேள இசையுடன் பால்குட ஊா்வலம், அம்மன் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
மதியம் சிறப்பு அன்னதானம், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு திரைப்பட கலைஞா்கள் 70 போ் பங்கேற்கும் திரை நட்சத்திர இசை கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் இறையருள் நற்பணி மன்றத்தாரும் செய்து வருகின்றனா்.