முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணைநீா்மட்டம் 109.20 அடி
By DIN | Published On : 20th January 2020 09:48 AM | Last Updated : 20th January 2020 09:48 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா் மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 109.20 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 824 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டிருந்தது.
அணையின் நீா் இருப்பு 77.27 டிஎம்சி-யாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.