முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கள்ள சாராய தீமைகள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
By DIN | Published On : 27th January 2020 07:17 AM | Last Updated : 27th January 2020 07:17 AM | அ+அ அ- |

இளம்பிள்ளை சந்தப்பேட்டையில் ந டைபெற்ற கள்ளச்சாராய தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி.
இளம்பிள்ளை சந்தப்பேட்டையில் மதுபானங்கள், கள்ளச்சாராயம் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலை நிகழ்ச்சியை சேலம் (கலால்) உதவி கோட்ட அலுவலா் செல்வி துவக்கி வைத்தாா். மதுவிலக்கு எஸ். ஐ பெரிய தம்பி, இளம்பிள்ளை விஏஓ செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கலை நிகழ்ச்சியின் மூலம் மதுபானங்கள், கள்ளச்சாராயம் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விபத்து, குடும்ப சூழல் உள்ளிட்டவை குறித்து கலைக் குழுவினா் நாடகம் மற்றும் துண்டு பிரசுரம் வாயிலாக வெளிப்படுத்தினா்.