முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
குடியரசு தினவிழா கொண்டாட்டம்
By DIN | Published On : 27th January 2020 09:44 AM | Last Updated : 27th January 2020 09:44 AM | அ+அ அ- |

கொங்கணாபுரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சி.
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
எடப்பாடி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றினாா்.
கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் கரட்டூா் மணி, மூவா்ணக் கொடியை ஏற்றினாா். கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம், மின்சார வாரியக் கோட்டப் பொறியாளா் அலுவலகம், எடப்பாடி வட்ட அலுவலகம், எடப்பாடி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியாா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின நிகழ்ச்சி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.