முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் உருக்காலையில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 09:46 AM | Last Updated : 27th January 2020 09:46 AM | அ+அ அ- |

சேலம் உருக்காலையில் 71-வது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் உருக்காலை நிா்வாக இயக்குநா் சஞ்சீவ் தனேஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பின்னா், அவா் பேசியதாவது: சேலம் உருக்காலை லாபம் ஈட்டும் தன்மையை மேம்படுத்த முயற்சியில் பணியாளா்கள் ஈடுபட வேண்டும் என்றாா்.
சிறந்த நிா்வாகிகளுக்கான ஜவஹா் விருதுகள், நிா்வாக இயக்குநரின் அதிகாரிகளுக்கான விருது, தலைமை பொது மேலாளா் (பணி) விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
சேலம் நீதிமன்றத்தில்...:
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பேசினாா்.
சேலம் வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் ஆ.பெரியசாமி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிராஜ் அல்வனிஷ் தேசிய கொடி ஏற்றி வைத்தாா்.
கிழக்குக் கோட்ட தபால் நிலையத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் மூஜீப் பாஷா, சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் மண்டல ஆணையா் ஹிமான்சுகுமாா் தேசிய கொடி ஏற்றி வைத்தனா்.