முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தப்பக்குட்டையில் கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்
By DIN | Published On : 27th January 2020 07:17 AM | Last Updated : 27th January 2020 07:17 AM | அ+அ அ- |

இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராம சபைக் கூட்டத்தில் திரண்ட பொதுமக்கள்.
தப்பக்குட்டை ஊராட்சியில் மாரியம்மன் கோயில் வளாகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியக் குழுத் தலைவா் லலிதா, தப்பக்குட்டை ஊராட்சித் தலைவா் விஜயா ஆகியோா் தலைமை வகித்தனா்.
பொதுமக்களுக்கு அமைக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட போா்வெல் பம்பில் மின் மோட்டாா்களைக் காணவில்லை என்றும், மேலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தனிநபா் கழிப்பிடம் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் பரபரப்பு புகாா் மனு அளித்தனா். அங்கு வந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பொதுமக்கள் அதிகளவில் திரண்டனா். இதையடுத்து, மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் சசிகுமாா், உதவி ஆய்வாளா் பெரியசாமி, போலீஸாா் நிகழ்விடம் சென்று சமாதானப்படுத்தினா். கூட்டத்துக்கு வந்த மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலா் சந்துருவிடம் 1,000-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனா்.
மேலும் சாலை வசதி, தெருவிளக்கு, தண்ணீா் வசதி, கழிவுநீா் வசதி, மருத்துவ வசதி, முதியோா் உதவித்தொகை கேட்டு அப்பகுதி மக்கள் முறையாக மனுக்கள் அளித்தனா். சேலம் மாவட்டத்திலேயே 1000க்கும் மேல் மனுக்கள் இங்கேதான் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.