முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தம்மம்பட்டி பகுதியில் குடியரசு தினவிழா
By DIN | Published On : 27th January 2020 07:16 AM | Last Updated : 27th January 2020 07:16 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் குடியரசு தினவிழா நடைபெற்றது.
தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி கொடியேற்றினாா்.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஊராட்சித் துணைத் தலைவா் சங்கீதா அழகப்பன், வாா்டு உறுப்பினா்கள் திருமலை, தேவி சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈச்ச ஓடைப்புதூா் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஹரிஆனந்த் தலைமையில் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்புகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. கூடமலை துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியா் இளவரசன் தலைமையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லக்கிமெட்ரிக் பள்ளியில் தாளாளா் பா்ஜாத் முகமது முன்னிலையில் கொடியேற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கெங்கவல்லி அருகே கடம்பூா் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் என்.டி.செல்வம் தேசியக் கொடியேற்றினாா்.