முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி தூய்மைப் பள்ளி விருது: ஆட்சியா்
By DIN | Published On : 27th January 2020 07:17 AM | Last Updated : 27th January 2020 07:17 AM | அ+அ அ- |

தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தூய்மைப் பள்ளி விருதை வழங்கி சேலம் ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான தூய்மை பள்ளிகளாக, ஐந்து அரசு மேனிலைப் பள்ளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக, ஆத்தூா் கல்வி மாவட்டத்தில் கெங்கவல்லி அருகே தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டது.
அதற்கான தூய்மைப் பள்ளி விருதை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் சேலத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆா். மலா்விழி, கணித பட்டதாரி ஆசிரியா் பே. ரவிசங்கா் ஆகியோரிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.