முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணை நீா்வரத்து 484 கனஅடி
By DIN | Published On : 27th January 2020 09:49 AM | Last Updated : 27th January 2020 09:49 AM | அ+அ அ- |

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 484 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக சரிந்துள்ளது.
சனிக்கிழமை காலை நொடிக்கு 421 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 484 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 107.79 அடியாகவும் நீா் இருப்பு 75.30 டி.எம்.சி.யாகவும் இருந்தது. மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டது.