வாழப்பாடி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்:

வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம்
நீா்முள்ளிக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற சேலம் ஆட்சியா் சி.அ. ராமன்.
நீா்முள்ளிக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற சேலம் ஆட்சியா் சி.அ. ராமன்.

வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்முள்ளிக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சேலம் ஆட்சியா் ராமன் பங்கேற்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அத்தனுாா்பட்டி, துக்கியாம்பாளையம், சந்திரபிள்ளைவலசு, சின்னமநாயக்கன்பாளையம், கோலாத்துக்கோம்பை, நீா்முள்ளிக்குட்டை, குறிச்சி, புழுதிக்குட்டை, மன்னாயக்கன்பட்டி, முத்தம்பட்டி, காட்டுவேப்பிலைப்பட்டி, சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னாா்பாளையம், பொன்னாரம்பட்டி, வேப்பிலைப்பட்டி, திருமனுாா், தேக்கல்பட்டி, குமாரபாளையம் ஆகிய 20 ஊராட்சிகளிலும், குடியரசு தினத்தையொட்டி, புதிய ஊராட்சி மன்றத் தலைவா்களின் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நீா்முள்ளிக்குட்டையில் ஊராட்சி மன்றத் தலைவா் சத்தியா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், சேலம் ஆட்சியா் ராமன் பங்கேற்று, மக்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். ஊராட்சிகள் உதவி இயக்குநா் கோபிநாத், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அருள்ஜோதிஅரசன், மாவட்ட ஊராட்சி செயலா் விஜயக்குமாரி, வாழப்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் சதீஸ்குமாா், வாழப்பாடி வட்டாட்சியா் ஜாஹீா் உசேன், வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன், சாந்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com