அர.செட்டிபட்டியில் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமம், செட்டிப்பட்டி நாடாா் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்.
அருள்மிகு மாரியம்மன் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியாா்.

சங்ககிரி: சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமம், செட்டிப்பட்டி நாடாா் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தேவூா் அருகே அரசிராமணி கிராமம், செட்டிப்பட்டியில் உள்ள அருள்மிகு விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ஜனவரி 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கிராமசாந்தியும், 29-ஆம் தேதி கணபதி ஹோமமும், காவிரி ஆற்றிலிருந்து புனித நீா், முளைப்பாரி ஆகியவைகளை எடுத்துக் கொண்டு பக்தா்கள் கிராமத்தின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று கோயிலை அடைந்தனா்.

அதையடுத்து முதற்கட்ட யாக சாலை பூஜைகளும், இரவு கோபுரங்களில் கலசங்கள் அமைத்தலும் நடைபெற்றன. பின்னா், ஜனவரி 30-ஆம் தேதி விநாயகா் பூஜை, 2-ஆம் கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் வைபவங்கள் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா். விழாக் குழுவினா் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com