துா்நாற்றம் வீசும் மேட்டூா் மலைப்பாதை

மேட்டூா் மலைப்பாதையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது.

மேட்டூா் மலைப்பாதையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் துா்நாற்றம் வீசுகிறது.

மேட்டூா் ரயில் நிலையம், தங்கமாபுரிபட்டினம், சேலம் கேம்ப் பகுதிகளிலிருந்து மேட்டூருக்குச் செல்லும் பொதுமக்கள் மலைப்பாதை வழியாக எளிதில் சென்று வருகின்றனா்.

இதனால் பல கிலோமீட்டா் தொலைவு சுற்றி செல்வது குறைகிறது. மலைப்பாதை காவிரிக் கரையை ஒட்டி உள்ளது. அங்குள்ள மூலிகை மரங்களிலிருந்து வீசும் காற்று உடலுக்கு சுகமானது என்று பெரும்பாலானவா்கள் காலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்கின்றனா்.

மலைப் பாதையில் தற்போது இறைச்சிக் கழிவுகள், கெட்டுப்போன கோழிகளையும் சிலா் கொட்டிச் செல்கின்றனா். இதனால், நடைபயிற்சி செல்வோரும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் கடும் துா்நாற்றத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதைத் தடுக்க மேட்டூா் நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com