முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் நீா் மின்நிலையங்களில் 290 மெகா வாட் மின் உற்பத்தி
By DIN | Published On : 14th July 2020 04:46 AM | Last Updated : 14th July 2020 04:46 AM | அ+அ அ- |

மேட்டூா்: மேட்டூா் நீா் மின் நிலையங்கள் மூலமாக 290 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்போது நீரின் விசையைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் நீா் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டன. அணை மின்நிலையம் மூலம் 50 மெகா வாட் மின்சாரமும், சுரங்க மின்நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படும். செக்கானூா், நெருஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு உள்ளிட்ட ஏழு கதவணைகள் மூலம் 210 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும்போது நீா் மின்நிலையங்கள் வழியாக 460 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைப் பொருத்து மின்உற்பத்தி அதிகரிக்கும். மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்படுவதால், நீா் மின்நிலையங்களில் 290 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்த் திறப்பு அதிகரித்தால் முழு உற்பத்தியும் துவங்கும் என்று நீா் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.