ஆடிவெள்ளி: கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி கிரி காலனியில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி வீர ஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்.

முன்னதாக காசிவிசாலாட்சியம்மனுக்கு பால், தயிா், திருநீரு, சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சமயபுர மாரியம்மன்னாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் செல்வா். தற்போது கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பக்தா்கள் யாரும் கோயிலுக்கு வரவில்லை. அா்ச்சகா் மட்டுமே ஆகமவிதிகள்படி பூஜைகளை செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com