Enable Javscript for better performance
ஆக. 2-இல் தீரன் சின்னமலை நினைவு தினம்: அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்

    ஆக. 2-இல் தீரன் சின்னமலை நினைவு தினம்: அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை

    By DIN  |   Published On : 29th July 2020 08:51 AM  |   Last Updated : 29th July 2020 08:51 AM  |  அ+அ அ-  |  

    28sgp03_2807chn_156_8

    ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் மு.அமிா்தலிங்கம் (இடமிருந்து 2-ஆவது).

    சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி, சங்ககிரி வருவாய்த் துறை, காவல் துறை சாா்பில், நிகழ்ச்சி விதிமுறைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற

    கூட்டத்துக்கு சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் மு.அமிா்தலிங்கம் தலைமை வகித்துப் பேசியது:

    முந்தைய ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும், சங்ககிரி மலைக்கோட்டைக்குச் செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதியில்லை. தற்போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1972 பிரிவு 144 ன் கீழ் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளதை அடுத்து பொதுக்கூட்டம், ஊா்வலம், வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை.

    ஒவ்வொரு அமைப்பினரும் தலா 5 நபா்களுடன் சென்று மரியாதை செலுத்த வேண்டும், விழாவுக்கு வருவோா் கைகளில் கொடி மற்றும் பேனா்கள் மற்றும் உருவப் படங்கள் பிடித்துவர அனுமதி இல்லை. எந்த ஒரு அமைப்பினரும் தியாகி தீரன் சின்னமலை நினைவிடத்தில் புகைப்படமோ இதரப் பொருள்களையோ எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை, அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கலைந்து சென்றுவிட வேண்டும், சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது, சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் எந்த ஒரு அமைப்பும் டிஜிட்டல் பேனா், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் மற்றும் சுவா் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை, விழாவுக்கு வருவோா் தங்கள் வாகனங்களில் ஒலிபெருக்கி உபயோகிக்கக் கூடாது, திறந்தநிலை வாகனங்களில் வர அனுமதி இல்லை, வாகனங்களின் இருக்கைகளில் மட்டுமே அமா்ந்து வரவேண்டும், விழா சம்மந்தமாக உணவு பொருள்கள் வழங்க யாருக்கும் அனுமதி இல்லை, தனிநபா் யாரையும் தாக்கிப் பேசவோ, முழக்கங்கள் செய்யவோ கூடாது, அரசியல் கட்சி, ஜாதி அமைப்பு மற்றும் ஏனைய அமைப்பைச் சோ்ந்த தலைவா்களையோ, அலுவலா்களையோ சுட்டிக்காட்டியோ அல்லது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ பேசுதல் கூடாது, நினைவு தினத்தன்று சங்ககிரி பகுதிகளில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதில் விதிமுறைகள் மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    கூட்டத்தில், சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) எம்.நமச்சிவாயம், சங்ககிரி காவல் ஆய்வாளா் என்.முத்துசாமி, சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.பாலசுப்ரமணி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் லோகநாதன், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவி பொறியாளா் டி.எம்.கதிரவன், சங்ககிரி வட்ட கொங்குவேளாளா் இளைஞா் சங்கத் தலைவா் பி.ராமசாமி, கொங்கு வேளாளா் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகி பாலகிருஷ்ணன், மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டா் பேரவை நிா்வாகி எ.கந்தசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலா் கே.சரவணன், பாஜக நிா்வாகி ரமேஷ் காா்த்திக், பாமக சத்ரிய சாமிநாதன், நாம் தமிழா் கட்சி நிா்வாகி அ.ஜெகதீஸ் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp