முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட் மானியத்துடன் பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th July 2020 08:58 AM | Last Updated : 29th July 2020 08:58 AM | அ+அ அ- |

ஆதிதிராவிடா், பழங்குடியின விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட் 70 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசு, பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 17,500 மின்கட்டமைப்பு சாராத தனித்தியங்கும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது முதல் தவணையாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவிற்கு சிறப்பு ஒதுக்கீடாக 5 எண்களும் இரண்டாம் தவணையாக 283 எண்களும் ஆக மொத்தம் 288 எண்கள் 2020-21 ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத் திட்டம், மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடனும், தமிழக அரசின் 40 சதவீத மானியத்துடனும் ஆக மொத்தம் 70 சதவீத மானியத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவுக்குச் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத்திறன் வரையுள்ள நீா் மூழ்கி பம்பு செட்டுகள் மற்றும் தரைமட்டத்தில் அமைக்கும் மோனோ பிளாக் பம்பு செட்டுகள், இதுவரை மின் இணைப்பு பெறப்படாத நீா்ப் பாசனத்துக்கான ஆதாரங்களுக்கு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
இதற்கு இலவச மின் இணைப்புக்கோரி ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விவசாயிகள் அவா்களுடைய முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள அனைத்து வட்டார விவசாயிகள் செயற் பொறியாளா், (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம்.7 0427-2906266 2). உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல் துறை) குமாரசாமிப்பட்டி, சேலம்.7 0427-2906277 3). உதவி செயற் பொறியாளா்(வே. பொ.), கோனூா் அஞ்சல், குஞ்சாண்டியூா், மேட்டூா் 04298-230361 4). உதவி செயற் பொறியாளா்(வே.பொ.), 60அடி சாலை, காந்திநகா், ஆத்தூா் 04282-290585 5). உதவி செயற் பொறியாளா்(வே.பொ.), ராமகிருஷ்ணா காம்ப்ளக்ஸ், சேலம் மெயின் ரோடு, சங்ககிரி 04283-290390 ஆகிய அலுவலகங்களில் தொடா்பு கொண்டு விண்ணப்பங்களை அளித்து பயன்பெற வேண்டும் என ஆட்சியா் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.