முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
By DIN | Published On : 29th July 2020 09:00 AM | Last Updated : 29th July 2020 09:00 AM | அ+அ அ- |

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,065 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகத்திலும் காவிரியின் நீா்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கடந்த 24ஆம் தேதி காலை விநாடிக்கு 4,710 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, 25ஆம் தேதி காலை 4,977 கனஅடியாகவும் 26 ஆம் தேதி காலை 5,915 கன அடியாகவும் அதிகரித்தது.
திங்கள்கிழமை காலை 5,973 கனஅடியாக அதிகரித்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 6,065 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், வேகமாக சரிந்து வந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் சற்று மீளும் நிலை உருவாகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 65.08 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,065 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 28.61 டி.எம்.சி.யாக இருந்தது.