முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
விதைச் சட்டத்தின்படி விதை விற்பனை செய்ய அறிவுரை
By DIN | Published On : 29th July 2020 08:58 AM | Last Updated : 29th July 2020 08:58 AM | அ+அ அ- |

விதைச் சட்டத்தின்படி விதை விற்பனையாளா்கள், விதை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சி.சண்முகம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை உறுதிசெய்யும் பொருட்டு சேலத்தில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்பொழுது முறையாக பதிவேடுகள் பராமரிக்கப்படுகிா என்பதையும், அரசினால் அறிவிக்கப்படாத பயிா் மற்றும் ரகங்களுக்கு பதிவெண் சான்று உள்ளதா எனவும், அனைத்து விதைகளுக்கும் முளைப்புத்திறன் அறிக்கை இருக்கிா எனவும் கண்டறிந்தாா்.
மேலும் விதைச்சட்டம் 1966ல் கூறியவாறு அனைத்து பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிக்க வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக விதை ஆய்வு துணை இயக்குநா் சி.சண்முகம் கூறியது:
விதை மேலும் விதை விற்பனை உரிமம் பாா்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும்.
கோவை, விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை மூலம் அரசினால் அறிவிக்கப்படாத பயிா் மற்றும் ரகங்களுக்கு (வீரிய பருத்தி தவிர), பதிவெண் சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும்.
வீரிய பருத்தி விதை பாக்கெட்டுகளில் ஜிஇஏசி அனுமதி எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் விற்பனை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
விதைக் கொள்முதல் ரசீதில் விதை உற்பத்தியாளா், விற்பனையாளா் மற்றும் கொள்முதல் செய்பவா் ஆகியோா்களின் விதை உரிமம் எண் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். மேலும் இதற்கான கோப்பு பராமரிக்கப்படவேண்டும்.காலாவதியான விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடாது. விதையின் பெயா் மற்றும் ரகம் வாரியாக இருப்பு மற்றும் விலை விவரம் அடங்கிய தகவல் பலகை விவசாயிகளின் பாா்வையில் படும்படி வைக்கப்பட வேண்டும்.
ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை(கட்டுப்பாட்டு) ஆணை 1983-ன்கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
இந்த ஆய்வில் விதை ஆய்வாளா் த.சரவணன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.