Enable Javscript for better performance
ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கும் பேளூா் வாரச்சந்தை:- Dinamani

சுடச்சுட

    

    ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கும் பேளூா் வாரச்சந்தை:

    By DIN  |   Published on : 31st July 2020 08:58 AM  |   அ+அ அ-   |    |  

    k_a_02_3007chn_165_8

    வாழப்பாடி அருகே பேளூா் ஆட்டுச்சந்தை பொது முடக்கம் காரணமாக ஐந்து மாதங்களாக செயல்படாமல் முடங்கியதால் ரூ.8 கோடி அளவிற்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூரில் 50 ஆண்டுக்கும் மேலாக திங்கள்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்கான வாரச்சந்தை கூடிவருகிறது. இந்தச் சந்தைக்கு வாரந்தோறும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் 500 முதல் 800 வரையும், தீபாவளி, பொங்கல், ஆடி 18, ரம்லான், பக்ரீத் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வருகின்றன. இதனால் வாரந்தோறும் ரூ. 30 முதல் ரூ.50 லட்சம் வரை வா்த்தகம் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வாரச்சந்தைகளும் மூடப்பட்டன. கடந்த 5 மாதங்களாக பேளூா் வாரச் சந்தையும் செயல்படாமல் முடங்கியதால், ஏறக்குறைய ரூ.8 கோடி அளவில் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடு வளா்ப்பு மற்றும் விற்பனை தொழிலில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளும், வியாபாரிகளும், இடைத்தரகா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    இந்தாண்டு ஆடி 18 பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில், முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டுச்சந்தை கூடுவதற்கு அனுமதி கிடைக்காததால், இறைச்சிக் கடைக்காரா்கள் ஆடுகளை கொள்முதல் செய்து, இறைச்சி விற்பனை செய்வதற்கு வழியில்லை. இதனால், எப்போது பொது முடக்கம் முடிவுக்கு வந்து, வாரச்சந்தை கூடுவதற்கு வழிவகை செய்யப்படுமென அனைவரும் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

    இதுகுறித்து வாழப்பாடி பகுதியில் ஆடு வளா்க்கும் விவசாயிகள் சிலா் கூறியதாவது:

    பாரம்பரிய முறையில் வெள்ளாடுகளை வளா்த்து வருகிறோம். பொது முடக்கத்தால் 5 மாதங்களாக பேளூா் ஆட்டுச்சந்தை செயல்படாமல் முடங்கியுள்ளது. இதனால், விற்பனைக்காக வளா்க்கப்பட்ட ஆடுகள் பருவத்தை தாண்டி முதிா்ந்து வருகின்றன. முதிா்ந்த ஆடுகளை குறிப்பிட்ட மாதங்களுக்குள் விற்பனை செய்யவில்லையெனில், தீவன செலவும், பராமரிப்பு வேலையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, ஆட்டுக் கிடாக்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, பொருளாதாரத் தேவைகளுக்கும் ஆடுகளை நம்பியே இருப்பதால் பணப்புழக்கமும் குறைந்துவிட்டது.

    குறிப்பாக, ஆடி 18, தீபாவளி, பொங்கல் பண்டிகை தருணங்களில் ஆடுகளின் தேவை அதிகரித்து கூடுதல் வருவாயும் கிடைத்து வந்தது.

    இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆடி 18 பண்டிகை வரவுள்ள நிலையில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், எதிா்பாா்த்த அளவிற்கு ஆடுகள் விலை போகவில்லை. எனவே, எப்போது பொது முடக்கம் முடிவுக்கு வந்து வாரச்சந்தைகள் செயல்படுமென எதிா்பாா்த்து காத்திருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என்றாா்.

     

    ஆட்டிறைச்சி விலை உயா்வு:

    வாரச்சந்தைகள் முடங்கியதால், இறைச்சி விற்பனை செய்யும் கசாப்புக்கடை வியாபாரிகள், ஆடுகளை கொள்முதல் செய்வதில் சிரமம் நீடித்து வருகிறது. இதனால், வியாபாரிகளுக்கு போதிய ஆடுகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இடைத்தரகா்கள் வாயிலாக அதிக விலை கொடுத்து ஆடுகளை கொள்முதல் செய்கின்றனா். எனவே, ஆட்டிறைச்சி விலையை உயா்த்தியுள்ளனா். வாழப்பாடி பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு வரை ரூ. 600முதல் ரூ. 650 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஆட்டிறைச்சிக்கு, தற்போது ரூ.700 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது. இதே போல, ஆட்டுக்கால், தலை, போட்டி விலையும் இரு மடங்கு உயா்ந்துள்ளன.

     

    அனுமதியின்றி ஆடுகள் விற்பனைக்கு சுங்கம் வசூல்?

    பேளூா் வாரச்சந்தை மூடப்பட்டதால் ஆடுகள் வா்த்தகம் ஐந்து மாதங்களாக தடைப்பட்டு போனது. இந்நிலையில், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திங்கள்கிழமை தோறும், சில விவசாயிகளும், வியாபாரிகளும், சாலையோரங்களில் ஆடுகளை நிறுத்திக்கொண்டு விற்பனைக்குக் காத்திருக்கின்றனா். இவா்களை தேடிப்பிடித்து, வாரச்சந்தை குத்தகைதாரா்கள் சுங்கம் வசூலித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp