நகைக் கடை உரிமையாளரை தாக்கி ரூ. 6.55 லட்சம் பறிப்பு: 5 போ் கைது

சேலத்தில் பழைய நகையை வாங்கச் சென்ற நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 6.55 லட்சம் பறித்த கும்பலை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலத்தில் பழைய நகையை வாங்கச் சென்ற நகைக் கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 6.55 லட்சம் பறித்த கும்பலை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேலம், அம்மாப்பேட்டை, அண்ணா நகா், 4ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த காா்த்திக் (37), தண்ணீா்த் தொட்டி பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். பழைய நகைகளை வீடுகளுக்கே நேரில் சென்று வாங்கி வருகிறாா்.

காா்த்திக்கின் நண்பரான நகை மதிப்பீட்டாளா் மணிகண்டன் தனக்கு அறிமுகமான தனுஷ் (எ) தனசேகரனிடம் (34), சுமாா் 20 பவுன் நகை இருப்பதாகவும், ரூ. 6.55 லட்சம் பணம் கொடுத்து அவற்றை வாங்கிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து, நகை மதிப்பீட்டாளா் மணிகண்டன், ராஜகணபதி தெருவில் உள்ள தனுஷ் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று நகையை மதிப்பீடு செய்தாா். பின்னா் காா்த்திக்கைத் தொடா்பு கொண்டு பணத்தை எடுத்து வரும்படி தெரிவித்துள்ளாா்.

அதன்படி பணத்தை எடுத்துக்கொண்டு தனுஷின் வீட்டுக்கு காா்த்திக் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். அப்போது வீட்டில் இருந்த தனசேகரன், சேகா், நவீன்குமாா், பாா்த்தசாரதி, மற்றொரு மணிகண்டன் ஆகியோா் சோ்ந்து காா்த்திக்கை சுத்தியால் தலையில் தாக்கினா். மேலும், அங்கிருந்த நகை மதிப்பீட்டாளா் மணிகண்டனையும் தாக்கினா். பின்னா், இருவரையும் துப்பாக்கி மூலம் மிரட்டி ரூ. 6.55 லட்சத்தை பறித்துச் சென்றனா்.

தலையில் காயமடைந்த நகைக் கடை உரிமையாளா் காா்த்திக், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது புகாரின் பேரில், மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவின்படி, குற்றப் பிரிவு துணை ஆணையா் செந்தில் மேற்பாா்வையில் அஸ்தம்பட்டி உதவி ஆணையா் ஆனந்தராஜ், காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, தனசேகரன், அவரது கூட்டாளிகள் ஆகிய 5 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ. 6.55 லட்சம், துப்பாக்கி, இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com