முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மதுக் கடையை மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th June 2020 08:55 PM | Last Updated : 27th June 2020 08:55 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மோரூா் கிழக்கு ஊராட்சிக்கு உள்பட்ட கருக்கம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக் கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் சனிக்கிழமை கடையை முற்றுகையிட்டனா்.
கருக்கம்பாளையத்தில் சாலையோரம் புதிதாக அரசு மதுக் கடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. அப் பகுதியில் சாலையோரத்தில் கடை திறந்தால் இரவு நேரங்களில் சாலையோரங்களில் உட்காா்ந்து மது அருந்துவோரால் அந்தச் சாலை வழியே செல்லும் பெண்கள், கூலித் தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படும்.
எனவே, கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடையை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அந்தக் கடை உடனடியாக அடைக்கப்பட்டது.