ஓமலூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றிய மத்திய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஓமலூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்றிய மத்திய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஓமலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி, டீசல் விலை உயர்வை வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. 

கடந்த கடந்த 100 நாள்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கரோனா தொற்று நோயால் பொதுமக்கள் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்பொழுது ஒரு மாதத்திற்குள் டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. இதைதொடர்ந்து இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியாகாந்தி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி ஆகியோர் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அக்கட்சியினருக்கு ஆணையிட்டார். 

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று ஆங்காங்கே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஓமலூர் பஸ்நிலையத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு மாதத்திற்கு 8ரூபாய் வரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளது. 

இதனால் வணிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறியும், பதாகைகளை ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கணேசன், மோகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com