ஏற்காட்டில் கரோனா பரிசோதனை

ஏற்காட்டில் அரசுப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை கரோனா சளி பரிசோதனை செய்யப்பட்டது.
ஏற்காட்டில் அரசுப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறை பணியாளா்.
ஏற்காட்டில் அரசுப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் துறை பணியாளா்.

ஏற்காடு: ஏற்காட்டில் அரசுப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை கரோனா சளி பரிசோதனை செய்யப்பட்டது.

ஏற்காட்டில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி பெங்களூருக்கு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு ஏற்காடு திரும்பிய பெண்ணுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவா் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். இந் நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் தொடா்பில் உள்ளவா்களை ஏற்காட்டில் தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு சுகாதாரத்துறையினா் உட்படுத்தி வருகின்றனா்.

திங்கள்கிழமை ஏற்காட்டில் சுகாதார துறையினா், மருத்துவ அலுவலா்கள், காவல் துறை காவலா்கள், வருவாய்த் துறை, பத்திரப் பதிவுதுறை, துப்புரவுப் பணிபுரியும் பணியாளா்கள் மற்றும் காய்கறி விற்பனையாளா்கள் என 64 நபா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com