சேலத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்துக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோா் மூலம் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.

சேலம் மாநகரம்- 8 போ், ஓமலூா்- 14 போ், பெத்தநாயக்கன்பாளையம்-13 போ், கொங்கணாபுரம்- 10 போ், இதர மாவட்டங்களில் இருந்து வந்தோா் (தேனி- 13, தருமபுரி- 3, சிவகங்கை- 3, கள்ளக்குறிச்சி- 3, சென்னை- 8) உள்ளிட்ட 79 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

அதேபோல கா்நாடகம்- 10, மத்தியபிரதேசம்- 14, தில்லி- 4 உள்ளிட்ட வெளிமாநிலங்கலிலிருந்து வந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 109 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியாகி உள்ளது.

இதன்மூலமாக சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 710 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 262 போ் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 446 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com