வெண்டைக்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகளுக்கு வருத்தம்

தேவூா் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பகுதியிலிருந்து விவசாயிகளிடம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 3 என்ற விலையில் வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனா்.
மோட்டூா் கிராமத்தில் செடியிலிருந்து வெண்டைக்காய்களை பறிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்கள்.
மோட்டூா் கிராமத்தில் செடியிலிருந்து வெண்டைக்காய்களை பறிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்கள்.

சங்ககிரி: தேவூா் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பகுதியிலிருந்து விவசாயிகளிடம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 3 என்ற விலையில் வியாபாரிகள் வாங்கிச் செல்வதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்துள்ளனா்.

தேவூா் வருவாய் வட்டத்துக்குள்பட்ட தேவூா், மோட்டூா், செட்டிப்பட்டி, காவேரிப்பட்டி, பெரமிச்சிப்பாளையம், சென்றாயனூா், வட்டாரம்பாளையம், கோனேரிப்பட்டி, மேட்டாங்காடு, பூமணியூா் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கிணற்று நீா் பாசனத்தைக் கொண்டு நிகழாண்டு 600-க்கும் மேற்பட்ட ஏக்கா்களில் வெண்டைக்காய் சாகுபடி செய்தனா்.

கரோனா பொதுமுடக்க காலத்துக்கு முன்பு கிலோ ஒன்றுக்கு ரூ. 30-க்கு வியாபாரிகள் பெற்றுச் சென்றனா். இப் பகுதியில் பெறும் வெண்டைக்காயை ஈரோடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தையொட்டி வெளிமாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வராததால் உள்ளூா் வியாபாரிகள் வழக்கத்தைவிட திங்கள்கிழமை கிலோ ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ. 4 வரை பெற்றுச்சென்றனா். நாளுக்குநாள் விலை குறைந்து வருவதால் காய்களை செடிகளில் இருந்து பறிக்கும் தொழிலாளா்களுக்குகூட கூலி வழங்க முடியாமல் சிரமம் அடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும் வெண்டைக்காய்களை பறிக்காமல் செடிகளுடன் விட்டு வைத்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வருகின்றனா். நிகழாண்டு பயிரிட்ட செலவுக்குகூட விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனா். எனவே, அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தேவூா் உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காயின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரை வியாபாரிகள் பெற்றுச் சென்ற நிலையில் அதே வெண்டைக்காய் சங்ககிரி நகா் பகுதியில் திங்கள்கிழமை கிலோ ஒன்றுக்கு ரூ. 20-க்கு விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com