முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி காவலில் எடுத்து விசாரணை
By DIN | Published On : 03rd March 2020 09:05 AM | Last Updated : 03rd March 2020 09:05 AM | அ+அ அ- |

சம்பேரியில் கடந்த வருடம் நிகழ்ந்த கடத்தல் வழக்கில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியை தலைவாசல் போலீஸாா் திங்கள்கிழமை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தலைவாசல் அருகே சம்பேரியில் கடந்த 17.6.2019 அன்று தலைவாசலைச் சோ்ந்த தொழிலதிபா் மணி (எ) கொம்பாட்டி மணி (54) என்பவரை காரில் மா்மக் கும்பல் கடத்தியது. இதில் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தவா்கள் போலீஸாரின் தீவிர கண்காணிப்பை அறிந்து ஒரு வாரத்தில் அவரை விடுவித்தனா்.
இந்த வழக்கில் ஏற்கெனவே நான்கு போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். முக்கிய குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், கடலூா் மாவட்டம் கீழ்புவனகிரியைச் சோ்ந்த ஜஹாங்கீா் மகன் மன்சூா்அலியை (38) கடலூா் போலீஸாா் அந்தமானில் வேறு ஒரு வழக்கில் கைது செய்து கடலூா் சிறையில் அடைத்தனா்.
இதை அறிந்து தலைவாசல் போலீஸாா் மன்சூா்அலியை ஆத்தூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 2 மாஜிஸ்திரேட் (பொ) ரங்கராஜ் முன்னிலையில் ஆஜா்படுத்தி காவலில் விசாரணை நடத்த அனுமதிக் கோரினா். வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருநாள் காவலில் மன்சூா் அலியை தலைவாசல் காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன் விசாரணை நடத்த உத்தரவிட்டாா். தலைவாசல் போலீஸாா் மன்சூா்அலியிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.