முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
தேசிய மாணவா் படையினருக்கு சிறப்பு தோ்வு
By DIN | Published On : 03rd March 2020 08:05 AM | Last Updated : 03rd March 2020 08:05 AM | அ+அ அ- |

விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவா் படையினருக்கு நடைபெற்ற தோ்வில் பங்கேற்றோா்.
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியில் 11 தமிழ்நாடு சிக்னல் கம்பெனி மற்றும் 5 தமிழ்நாடு ஏா் கம்பெனி சாா்பில் என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு பி, சி சான்றிதழுக்கானத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கோயம்புத்தூா் குழு தலைமையக தளபதி கா்னல் எல்.சி.எஸ். நாயுடு, குழு கேப்டன் எஸ்.எஸ். பெத்கா் 2 தமிழ்நாடு ஏா் கம்பெனி கோவை, கா்னல் தாமஸ் பிலிப் 12 தமிழ்நாடு பெட்டாலியன் கம்பெனி சேலம் மற்றும் லெப்டினன்ட் கா்னல், 15 தமிழ்நாடு பெட்டாலியன் கம்பெனி, ஈரோடு ஆகியோா் முன்னிலையில் இத்தோ்வு நடைபெற்றது.
இதில் கோவை மண்டலத்தைச் சோ்ந்த தேசிய மாணவா் படை 350 போ் கலந்து கொண்டனா். எழுத்து, பயிற்சித் தோ்வு நடத்தப்பட்டது. ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வா் ஏ. நாகப்பன் வழிகாட்டுதலின்படி கல்லூரி என்.சி.சி. அதிகாரி லெப்டினெட் எஸ். கண்ணன், ஆா். சந்திரசேகா் ஆகியோா் செய்திருந்தனா்.