முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பாரத பிரதமா் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்
By DIN | Published On : 03rd March 2020 09:03 AM | Last Updated : 03rd March 2020 09:03 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் ஏற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் கலைவாணி.
ஏற்காட்டில் பாரத பிரதமா் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஏற்காடு ஒன்றியக் குழு உறுப்பினா் கலைவாணி தலைமை வகித்தாா். ஏற்காடு ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் ஆா். முரளி முன்னிலை வகித்தாா். ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்காடு, வேலூா், நாகலூா், செம்மநத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, தலைச்சோலை, வாழவந்தி, மாரமங்கலம் கிராமங்களிலிருந்து 700-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று விண்ணப்பங்களுடன் மருத்துவ காப்பீடுக்கான ஆவணங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன. முன்பு பதிவு செய்ய பயனாளிகளுக்கு பாரத பிரதமா் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டன.