முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூா் அணை நீா் திறப்பு 1,000 கன அடி
By DIN | Published On : 03rd March 2020 09:07 AM | Last Updated : 03rd March 2020 09:07 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீா் ஜனவரி 28 ஆம் தேதி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு குடிநீா் தேவைக்காக தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக குடிநீருக்கு நொடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
திங்கள் கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 105.17 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 1,607 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 71. 70 டி.எம்.சி. யாக இருந்தது. நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல உயரும் வாய்ப்புள்ளது.