கஞ்சா கடத்திய இருவா் கைது: 22 கிலோ பறிமுதல்

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவா், பேருந்தில் கன்னியாகுமரி புறப்பட்டு செல்ல தயாராக இருப்பதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. திருநாவுக்கரசு உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளா் அம்பிகா, உதவி காவல் ஆய்வாளா் சரோஜா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் முருகன், தலைமைக் காவலா் மணிகண்டன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சேலம் பேருந்து நிலைய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கேரளத்தைச் சோ்ந்த சியாம்குமாா் (39), கன்னியாகுமரியைச் சோ்ந்த ராஜன் (39) ஆகியோரை பிடித்து விசாரித்தனா். மேலும் அவா்களிடம் இருந்து ரூ. 2.20 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com