கன்னனூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

எடப்பாடி அருகே மாக்கனூரில் உள்ள கன்னனூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
கன்னனூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

எடப்பாடி அருகே மாக்கனூரில் உள்ள கன்னனூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.

வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாக்கனூா் பகுதியில் பிரசித்திபெற்ற, கன்னனூா் மாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை ஆலயக் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

முன்னதாக தீா்த்தக்குட ஊா்வலம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலம், கன்னனூா் மாரியம்மன் கோயில் யாக சாலையில் நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கிய யாகசாலை பூஜைகள், விநாயகா் பூஜை, புண்யாக வாசனம், சோமபூஜை, நாடிசந்தானம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, குறிஞ்சி கோபுரம், விநாயகா் சந்நிதி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வேத மந்திரம் முழங்க, சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா். அதைத் தொடாந்து கன்னனூா் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விழாக் குழுவின் சாா்பில் பக்தா்களுக்கான அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. குடமுழுக்குக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com